Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (16:25 IST)
முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் பிலால் பூட்டோ தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், இந்திய முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
 
அப்போது, "உன் அம்மாவை கொன்றவர்கள் தீவிரவாதிகள். உன் தாத்தாவை கொன்றவர்கள் தீவிரவாதிகள். அப்படி இருந்தும் தீவிரவாதத்திற்கு ஆதரவு தருகிறீர்களே?" என்று ஒவைசி எம்பி பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்க, இந்தியாவிலிருந்து ஏழு எம்பிக்கள் குழு உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தது. அதற்கு போட்டியாக, பாகிஸ்தான் பிலால் பூட்டோ தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது.
 
இந்த குழு, அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்தியாவில் முஸ்லிம்கள் வெறுக்கப்படுகிறார்கள்," என்று தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுத்த ஒவைசி "உன் அம்மாவை கொன்றவர்கள் தீவிரவாதிகள். உன் தாத்தாவை கொன்றவர்கள் தீவிரவாதிகள். உன் குடும்பத்தை கொன்றால் தீவிரவாதிகள், எங்கள் தாய்மார்களை கொன்றால் தீவிரவாதிகள் இல்லையா?" என்று பதிலடி கொடுத்தார்.
 
"அமெரிக்கா மட்டும் பொருளாதார உதவி செய்யவில்லை என்றால், நீங்கள் நாட்டையே நடத்த முடியாது. எங்களை மிரட்ட வருகிறீர்களா?" என்று அவர் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments