Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிபிஎஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்

ஜிபிஎஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்
, செவ்வாய், 16 ஜனவரி 2018 (15:31 IST)
ஜிபிஎஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என டெல்லி போக்குவரத்துத் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு முதல் டெல்லியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் (GPS) கருவியைப் பொறுத்துவது கட்டயாமாக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த விதிமுறை அமலானது.ஆனால் டெல்லியில் உள்ள அனைத்து பொது சேவை வாகனங்களிலும் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் - ஆட்டோக்கள், டாக்சிகள், பேருந்து மற்றும் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் (GPS- Global Positioning System) சாதனங்கள் பொருத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. 
 
இதனையடுத்து போக்குவரத்துத்துறை ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பின்னர், ஒழுங்கான ஜிபிஎஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கவும் முடிவுசெய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: கால்வாயில் பிணமாக மீட்பு!