Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து பிரச்சினை.. நடுவழியில் நின்ற ’வந்தே பாரத்’ ரயில்! – பயணிகள் அவதி!

Advertiesment
Vandhe Bharat
, ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (12:16 IST)
இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வருவது வைரலாகியுள்ளது.

முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்கள் ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்டு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று மும்பை செண்ட்ரலில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி இந்த ரயில் எருமை மாடுகள் மீது மோதியதால் சேதம் அடைந்தது. பின்னர் முன்பக்க சேதம் சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்ட நிலையில் அடுத்த நாளே பசுமாடு மீது மோதி சேதமடைந்தது.

தொடர்ந்து வந்தே பாரத் ரயில் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று டெல்லியிலிருந்து உத்தர பிரதேசத்திற்கு செல்லும் வந்தே பாரத் ரயில் தொழில்நுட்ப கோளாறால் பாதி வழியிலேயே நின்றது.

6 மணி நேரத்திற்கும் மேலாகியும் கோளாறு சரிசெய்யப்பட முடியாததால் ரயில் நடுவழியிலேயே நின்றுள்ளது. இதனால் அதில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றொரு ரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ரயில் தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்தே பாரத் ரயில்கள் பிரச்சினைக்கு உள்ளாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை