21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்...

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:04 IST)
நேற்று காலமான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் நேற்று மாலை மரணமடைந்தார். இரவில் டெல்லியிலுள்ள அவரது இல்லத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன், பின்னர் பொதுமக்களும், முக்கிய தலைவர்களும் அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.
 
இவரது இறுதி ஊர்வலம் பாஜக அலுவலகத்தில் இருந்து ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு இன்று மதியம் கிளம்பியது. அங்கு உள்ள ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் வைத்து வாஜ்பாய்க்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது.
 
இறுதி சடங்குகளுக்கு பின் 21 குண்டுகள் முழங்க வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது. பசுஞ்சான வரட்டிகள், சந்தனக்கட்டைகளை கொண்டு அவரின் உடல் எரியூட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments