Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியா?? ஹர்ஷவர்தன் மறுப்பு!!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (08:00 IST)
இரு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ள நிலையில் மேலும் சில ஊசிகள் பயன்பாட்டுக்கு வரும் என ஹர்ஷவர்தன் தகவல்.  

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் மேலும் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் அடுத்து வரும் நாட்களில் மேலும் விரிவாக்கப்படும். இதுவரை 4 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் எதுவும் இல்லை. 
 
சர்வதேச சுகாதார அமைப்பு தந்துள்ள வழிகாட்டுதல் படியே ஒவ்வொரு பிரிவினராக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது இரு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ள நிலையில் மேலும் சில ஊசிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments