Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக வெடிப்பால் திடீரென பெய்த கனமழை: அடித்து செல்லப்பட்ட ரயில்வே பாலம்!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:04 IST)
மேக வெடிப்பால் திடீரென பெய்த கனமழை: அடித்து செல்லப்பட்ட ரயில்வே பாலம்!
மேக வெடிப்பு காரணமாக திடீரென பெய்த கனமழை காரணமாக ரயில்வே பாலம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இமாச்சல பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் திடீரென மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது 
 
இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சம்பா என்ற மாவட்டத்தில் திடீரென ரயில்வே ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து காணாமல் போய்விட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments