Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபான்மையின மாணவனை தாக்கிய விவகாரம்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (15:03 IST)
உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரத்தில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அனைத்து தன்மைகள் இருந்தும் சரியான நேரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், கடும் குற்றமாக இருக்கையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்,
 
மேலும் மாணவனின் தந்தை கொடுத்த வாக்குமூலம் எதுவும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும், வழக்குப்பதிவு செய்யவும் காலதாமதம் ஆகியுள்ளது என்று கூறிய நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
 
மேலும் மாணவனின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனைகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்  என்றும், இவ்விவகாரத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments