Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல்.. உபி முதல்வர் தமிழ் ட்வீட் வைரல்..!

Siva
வியாழன், 27 ஜூன் 2024 (14:33 IST)
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை எடுக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் செங்கோல் பெருமை குறித்து உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ட்விட்டில் இருப்பது இதுதான்:
 
இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.  'செங்கோல்'  பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இண்டி கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.
 
'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள்  ஒன்று. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments