நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக கொரோனா வைரஸிலிருந்து இன்னும் தமிழகம் விடுபடவில்லை
இந்த நிலையில் கொரோனா வைரஸால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அவ்வப்போது ஒரு சில மாநில முதல்வர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது