Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜொஷிமத் ஒரு தொடக்கம்தான்.. புதையும் அபாயத்தில் நகரங்கள்! – அதிர்ச்சி தகவல்!

Joshimat City
, புதன், 11 ஜனவரி 2023 (13:09 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுற்றுலா நகரமான ஜொஷிமத் நிலத்திற்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்டை நகரங்களுக்கும் இந்த ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இயற்கை அழகு கொண்ட சுற்றுலா வாசஸ்தலங்களில் ஒன்று ஜொஷிமத். சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் ஆன்மீக தலமாகவும் இருக்கும் ஜொஷிமத் கேதர்நாத் செல்பவர்களுக்கு வழியாகவும் உள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் நிலச்சரிவின் மீது இந்த நகரம் பின்னாளில் அமைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஜொஷிமத் நகரம் நிலச்சரிவுகள் மற்றும் பிளவுகளால் மூழ்கி வருகிறது. 4,500 கட்டிடங்கள் கொண்ட அந்த நகரத்தில் 610 கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு வாழத்தகுதியற்றவையாக மாறியுள்ளன.

அந்த கட்டிடங்களில் வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அந்த நகரத்தில் உள்ள மொத்த மக்களையும் வெளியேற்ற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் ஜொஷிமட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் ஆண்டுக்கு 6.5 செ.மீ என்ற கணக்கில் நிலத்திற்குள் புதைந்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜொஷிமட்டை தொடர்ந்து அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் அலிகார் மாவட்டத்தில் சில பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி