Publish Date: Tue, 19 Oct 2021 (11:16 IST)
Updated Date: Tue, 19 Oct 2021 (11:21 IST)
உத்தரகண்டில் நைனிதால் ஏரி அருகே திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள மக்களை மீட்க மீட்புக்குழு விரைந்துள்ளது.
உத்தரகண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மேகவெடிப்பால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அப்படியானதொரு சம்பவம் நடந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிதால் ஏரிப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் மக்கள் பலரும் சிக்கியுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு உத்தரகண்ட் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.