மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

Mahendran
திங்கள், 7 ஜூலை 2025 (11:23 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில், மருமகளும் அவருடைய தாயாரும் சேர்ந்து மாமியாரை அடித்து கொடுமைப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மருமகள் தனது தாயாருடன் சேர்ந்து வயதான மாமியார் சுதேஷ் தேவியை அடித்து கொடுமைப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. முன்னதாக, மாமியார் சுதேஷ் தேவி, தனது மருமகளும் அவரது தாயாரும் சேர்ந்து தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்த புகார் ஏற்கப்படவில்லை என்றும், மருமகளின் குடும்பத்தார் காவல்துறையில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்ததால் புகார் குறித்து விசாரணை செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தான், சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து, காவல்துறையினர் வேறு வழியின்றி வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், தற்போது சுதேஷ் தேவியின் மருமகள் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 சமூக வலைத்தளங்களில் சிசிடிவி வெளியானதால் தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வார்களா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments