Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கி போட்ட மாஸ்க்கை கழுவி விற்கும் கும்பல்! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (12:07 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பயன்படுத்திய மாஸ்க் உள்ளிட்டவற்றை சிலர் கழுவி மீண்டும் விற்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில் அனைவரும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாஸ்க் அணியும் பலர் உபயோகித்த பின் அவற்றை பொதுவெளியில் வீசிவிடும் சம்பவங்களும் தொடர்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உபயோகித்த மாஸ்க், கையுறை, பிபிஇ கிட் போன்றவற்றை கழுவி மீண்டும் விற்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் சட்னா மாவட்டத்தில் உள்ள பர்கேடா கிராமப்பகுதியில் சிலர் உபயோகித்த பின் குப்பைகளில் வீசப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட், கையுறை போன்றவற்றை கழுவி மீண்டும் கடைகளில் விற்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ள நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உபயோகப்படுத்தப்பட்ட மருத்துவ பொருட்களை பொதுமக்கள் கையில் கிடைக்கும்படி பொதுவெளியில் கொட்டாமல் தடுக்கவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments