Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய கொடூரம்!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (21:46 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில்  பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த கொடூரம் சம்பவம் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தின இந்தக் கொடூர சம்பவம் பற்றி போலீஸில் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பாஜக எம்.எல்.ஏவின் பிரதி நதி என்பதால் அவர்கள் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments