Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி UPI பரிவர்த்தனைகள் வேகமாக நடக்கும்! புதிய விதிகள் இன்று முதல் அமல்!

Prasanth K
செவ்வாய், 17 ஜூன் 2025 (09:03 IST)

இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்றவாறு பணப்பரிவர்த்தனை விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கான UPI முறை அறிமுகமானது முதலாக பல்வேறு பணப்பரிவர்த்தனைகளையும் மக்கள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சில சமயங்களில் UPI Payment செய்யும்போது பரிவர்த்தனை தோல்வி அடைவதும், பணம் திரும்ப வருவதும் தாமதமாவதால் மீண்டும் பணம் செலுத்தும் நேரம் தாமதமாகிறது. இது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வந்த நிலையில் பணப்பரிவர்த்தனை நேரத்தை விரைவுப்படுத்தி புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

 

அந்த வகையில் இதுவரை Transaction Failed, Transaction Reversal செயல்பாடுகளை அறிந்துக் கொள்வதற்கான நேரம் 30 வினாடிகளாக இருந்து வந்த நிலையில் அது 10 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு பணப்பரிவர்த்தனை செய்யும்போது UPI ID சரிபார்ப்பிற்கு 15 நொடிகள் வரை எடுத்துக் கொள்ளும் நிலையில் அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் யுபிஐ ஐடி சரிபார்ப்பு நடைபெறும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த புதிய யுபிஐ பணப்பரிவர்த்தனை திருத்தங்கள் மக்கள் வேகமாக பணப்பரிவர்த்தனை செய்யவும், இடையூறு இல்லாத பரிவர்த்தனை சேவையை பெறவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

இன்னொரு ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் எஞ்சின் பழுது.. பயணிகள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments