ரக்சா பந்தனை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பெண்கள் இரண்டு நாள்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக வடமாநிலங்களில் ரக்சா பந்தன் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்படும். வரும் 26ஆம தேதி நாடு முழுவதும் ரக்சா பந்தன் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
ரக்சா பந்தன் அன்று பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் இருக்கக்கூடிய ஆண்களின் கையில் ராக்கி கட்டுவது விழாவின் சிறப்பு. எனவே, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும்.
ரக்சா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநில அரசு, பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்கள், ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து மாநில அரசுப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.