Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை பற்றி பேசினால் உயிரோடு புதைப்பேன் – பாஜக அமைச்சர் மிரட்டல்!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (16:46 IST)
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் பேசிய அமைச்சர் மோடியை குறித்து பேசுபவர்களை உயிரோடு புதைத்து விடுவதாக மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சியினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தினர். துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ்சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் நாடு முழுவதும் ஒரு சதவீதம் மக்களே குடியுரிமையை எதிர்ப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் எதிர்ப்பவர்களை உயிரோடு புதைத்து விடுவதாகவும் பேசியுள்ளார். கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அமைச்சரின் பேச்சு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பொது வெளியில் வெளிப்படையாக கொன்றுவிடுவேன் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments