உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது: ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததால் அதிர்ச்சி..!

Siva
வியாழன், 3 ஜூலை 2025 (08:05 IST)
வட மாநிலங்களில் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையில்  சில சர்ச்சைக்குரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புனித யாத்திரை செல்லும் சாலைகளில் இந்து அல்லாதவர்கள் கடைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும், கடைகளின் உரிமையாளர் பெயர் மற்றும் கைப்பேசி எண்ணை கடைக்கு வெளியே எழுதி வைக்க வேண்டும் என்றும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சி கடைகள் இருக்கக் கூடாது என்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள பண்டிட் வைஷ்னோவ் தாபா என்ற உணவகத்தில், யோகா சாதனா ஆசிரமத்தை சேர்ந்த சீடர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆதார் அட்டையின்படி ஒரு கடையின் உரிமையாளர் முஸ்லிம் என்று தெரியவந்ததும், அந்த சீடர்கள் ஊழியர்களின் ஆடைகளை கழற்றி பார்த்துள்ளனர்.  இதையடுத்து, யஷ்வீர் மஹராஜின் ஆறு சீடர்களிடம் விளக்கம் கேட்டு முசாபர்நகர் புதுமண்டி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
 
இந்த சம்பவங்கள் வட மாநிலங்களில் மத நல்லிணக்கம் குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments