Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு பாஸ் செய்தால் 10ஆயிரம் ரூபாய். உபி முதல்வர் அதிரடி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (05:08 IST)
உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்ற ஆதித்யநாத் யோகி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



 



இதன்படி  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிப்பதாக கூறியுள்ளார். இந்த ரொக்கப்பரிசு மாணவர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தவே இந்த பரிசு அறிவிப்பு என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட  உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா அறிவித்தார். அவர் கூறியதாவது:

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை அளிக்கப்படும். மெரிட் அடிப்படையில் மாணவிகளின் பெயர் பட்டியல் பெறப்பட்டு முதல் ஒரு லட்சம் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்' என்று கூறியுள்ளார்.

உபி அரசின் இந்த அறிவிப்பால் மாணவிகள் குஷியில் உள்ளனர்.


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments