Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ டெல்லியில இறக்கு.. பாத்துக்கலாம்.. தடுப்புகளை உடைத்து சென்ற விவசாயிகள்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (11:18 IST)
டெல்லியில் விவசாய மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் எல்லை தடுப்புகளை உடைத்துக் கொண்டு உத்தர பிரதேச விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளான் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் வலுவடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மத்திய வேளாண் துறை அமைச்சர் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்நிலையில் டெல்லிக்குள் பல்வேறு மாநில விவ்சாயிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதால் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச – டெல்லி எல்லையான காஸிப்பூர் பகுதியில் எல்லைகளை தடுப்புகள் கொண்டு போலீஸார் அடைத்திருந்தனர். உத்தர பிரதேசத்திலிருந்து போராட்டத்திற்கு சென்ற விவசாயிகள் டிராக்டரால் தடுப்புகளை இடித்து தள்ளிடதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் போலீஸார் – போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments