Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தான காவல்துறை தேர்வு.. மறுதேர்வு எப்போது? முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

Mahendran
திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:23 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் எழுதிய காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 50 லட்சம் பேர்களுக்கும் மேல் இந்த தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசம் மாநில அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 60 ஆயிரம் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில் தேர்வுக்கு முன்னர் வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் எழுந்ததால்  காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆறு மாதங்களுக்கு நடத்த வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்தனார் உத்தரவு பெற்றுள்ளார் மேலும் தேர்வுகளை புனித தன்மைகள் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் விடமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments