பொதுமக்களை மிரட்டி தான் இளைஞரணி மாநாட்டை நடத்தினோம்: உளறி கொட்டிய திமுக நிர்வாகி..!

Mahendran
திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:16 IST)
சமீபத்தில் சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய இளைஞரணி மாநாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இந்த மாநாட்டை அந்த பகுதி மக்களை மிரட்டி தான் நடத்தினோம் என திமுக நிர்வாகி ஒருவர் உளறிக் கொட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்

சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடந்த இந்த விருந்தில் துரைமுருகன் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர் ஒருவர் பேசும்போது ’முதலில் மாநாடு நடத்துவதற்கு இடம் கிடைக்கவில்லை என்றும் அருகில் இருந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் ஒரு வழியாக எல்லோரையும் மிரட்டி தான் மாநாடு நடத்தினோம் என்றும் உளறி தள்ளினார்

அப்போது உடனே திமுக நிர்வாகிகள் சிலர் மைக்கை பிடுங்கி அவரை அமைதியாக உட்கார வைத்துள்ளனர், அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments