Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஐ.நா விருது பெரும் இந்தியர்! – அப்படி என்ன செய்தார்?

சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஐ.நா விருது பெரும் இந்தியர்! – அப்படி என்ன செய்தார்?
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (08:57 IST)
ஆண்டுதோறும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கான விருந்தை ஐ.நா சபை வழங்கி வரும் நிலையில் இந்த முறை இந்திய தொழிலதிபருக்கு அது வழங்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுசூழல் மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில் சுற்றுசூழலையும், இயற்கையையும் பாதுகாக்கும் வண்ணம் செயல்படும் நபர்களில் சிறந்த செயல்பாடுகளுக்காக ஒருவரை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐ.நாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு விருது இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டகாசார் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் வித்யுத் மோகன் தனது நிறுவனத்தின் மூலம் விவசாய கழிவுகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி அவற்றை கரி தயாரித்து விவசாயிகளின் வருமானத்திற்கு புதிய வழிவகை செய்துள்ளார். அவரது புதிய முன்னெடுப்புக்கு ஊக்கம் தரும் விதமாக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்! – முற்றும் முதல்வர் – மய்யத்தார் மோதல்!