உக்ரைன் போரால் தங்கம் விலை விண்ணைத்தொட்டுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர் புதின் போர்தொடுக்க உத்தரிவிட்டுள்ளதால், உக்ரைன் நாட்டின் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவவீரகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.108 உய்ர்ந்து ஒரு கிராம் ரூ.4,827 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.864 ஆக அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.38,616 க்கு விற்பனையாகிறது.
அதேபோல் உக்ரைன் போர் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2070 புள்ளிகள் சரிது 55,160 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 635 புள்ளிகள் சரிந்து 16,427 புள்ளிகளஅஅக வீச்சி அடைந்துள்ளது.