கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகளின் பாதுகாப்புக்காக யுஜிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்கலைக் கழகங்கள் சார்பில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்றும் மாணவிகளுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
மேலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு குறித்த விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது