தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! புதிய தேதி என்ன?

Siva
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (12:06 IST)
தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க நெட் தேர்வு தேதி மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாதம் 16 ஆம் தேதி நெட் தேர்வு  நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தேர்வும் அதே தேதியில் நடைபெற உள்ளது.

எனவே இரண்டு தேர்வையும் எழுதும் தேர்வர்கள் ஒரு தேர்வை மிஸ் செய்ய வேண்டிய இருந்ததால் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க நெட் தேர்வு தேதி மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி நெட் தேர்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு தேசியத் தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வ  எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இ

இந்த தேர்வு குறித்து கூடுதல் விவரங்களுக்கு: http://www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது 011 40759000 என்ற எண்ணை தொடர்புகொண்டு தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments