கேரளாவுக்கு ரூ.700 கோடியா? நாங்கள் சொல்லவே இல்லை: ஐக்கிய அரபு அமீரகம்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (16:19 IST)
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம், ரூ.700 கோடி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

 
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர்.
 
கேரள மாநிலத்துக்கு வெள்ள் நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தது. மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து ஐக்கிய அர்பு அமீரகம் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி அறிவித்தது என்ற செய்தி வெளியானது. 
 
இதையடுத்து மத்திய அரசை பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மத்திய அரசு வெளிநாடுகளின் உதவியை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், வெள்ள நிவாரண நிதி ரூ.700 கோடி வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறுயதாவது:-
 
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments