உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்: தலைமறைவான போலே பாபா அறிக்கை

Siva
வியாழன், 4 ஜூலை 2024 (14:58 IST)
உத்தர் பிரதேசம் மாநிலத்தில் பாபா ஆன்மீக நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலியான நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்திய பாபா தலைமறைவாகியுள்ளார் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த துக்ககரமான சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்று தலைமறைவாக இருக்கும் பாபா அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். இதனால், அங்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. சில சமூகவிரோதிகள் தான் இந்த நெரிசல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சனையை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும்  அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments