Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை –பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (12:42 IST)
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காஷ்மீர் போலிசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரின் சூது கொதைர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அந்த வீட்டை நள்ளிரவு 2 மணிக்கு சுற்றி வளைத்தனர்.

போலிஸார் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் வீட்டுக்குள் இருந்த படியே துப்பாக்கியால் சுட்டனர். போலிஸாரும் அவர்கள் மேல் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த இரண்டு தீவிரவாதிகளும் போலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் டிஜிபி வி கே பிர்தி ’முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அங்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments