பங்கு பிரிப்பதில் போங்கு: ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட போலீஸார்: வைரல் வீடியோ!

புதன், 14 ஆகஸ்ட் 2019 (11:28 IST)
உத்திரப்பிரதேசத்தில் காவலர்கள் இருவர் லத்தியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் லஞ்சமாக வாங்கிய பணத்தை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் இரு காவலர்கள் ஒருவரையொருவர் லத்திடில் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதும், மாவட்ட கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா, சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 
 
லஞ்ச பணத்தை பிரிப்பதில் காவலர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவத்தால் மக்களுக்கு போலீஸார் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. 

#WATCH Two policemen fight with each other allegedly over a bribe, in Prayagraj. Ashutosh Mishra, SP Crime, says “The incident took place day before yesterday. Both the policemen have been suspended. Investigation underway." pic.twitter.com/d83DItRTPf

— ANI UP (@ANINewsUP) August 13, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வேறு பெண்ணோடு சென்ற குடும்பத் தலைவன் – மனைவி மற்றும் மகள்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு !