Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:52 IST)
டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
 
கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்தி வெளியானது. 
இந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏற்கனவே டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது மேலும்  ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments