Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (15:40 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கேரள மாநிலத்தில் தினமும் சுமார் முப்பதாயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் நிபா வைரஸ் பொது மக்களை பயமுறுத்தி வருகிறது. இன்று காலை நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் மரணம் அடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காரணமாக பலியான நிலையில் தற்போது மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அரசு மருத்துவமனையிலும் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இருவரும் தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது 
 
அது மட்டுமின்றி மறைந்த 12 வயது சிறுவனிடம் தொடர்பில் இருந்த 188 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. குளிர்ச்சியான தட்பவெப்பம்..!

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: ஈபிஎஸ் உறுதி

சீமான் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்! அழைத்த நயினார்! - சீமான் முடிவு என்ன?

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தன்னை தானே கழுத்தறுத்து கொண்ட வாலிபர்.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பேசுவதை நிறுத்திக் கொண்ட காதலி! அரிவாளால் சரமாரியாக வெட்டிய காதலன்! - தென்காசியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments