Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட நடிகர்கள் நீரில் மூழ்கி இறந்தது இப்படித்தான் : அதிர்ச்சி வீடியோ

கன்னட நடிகர்கள் நீரில் மூழ்கி இறந்தது இப்படித்தான் : அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (14:15 IST)
பெங்களூரு ராம்நகர் அருகேயுள்ள திப்பகொண்டனஹல்லி நீர்தேக்கத்தில்  ‘மஸ்டிகுடி’ என்ற திரைப்படம் படமாக்கப்பட்டது. 


 

 
பிரபல கன்னட நடிகர் விஜய் ஹீரோவாக அடிக்கும் இப்படத்தில், உதய் மற்றும் அனில் இருவரும் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளனர். இதன் கிளைமேக்ஸ் காட்சிக்காக, பெங்களூருக்கு அருகே உள்ள திப்பஹோண்டனஹள்ளி என்ற ஆற்றில், விஜய் மற்றும் இரு வில்லன் நடிகர்களும் ஹெலிகாப்டரில் இருந்து ஆற்றில் குதிப்பது போல் நேற்று படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தனர்.
 
அப்போது, முதலில் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்தனர். அதன் பின் விஜய் குதித்தார். இதில் விஜயை மட்டும், அங்கிருந்தவர்கள் சென்று காப்பாற்றிவிட்டனர். ஆனால், தண்ணீரில் தத்தளித்த உதய் மற்றும் அனில் ஆகியோர் நீரில் மூழ்கிவிட்டனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை அவர்களின் உடலும் கிடைக்கவில்லை. 
 
அனில் மற்றும் உதய் இருவரும் முறைப்படி நீச்சல் கற்றுக்கொள்ளாதவர்கள் என்று கூறப்படுகிறது.  மேலும், படபிடிப்புக் குழுவினர் பல விதிமுறைகளை மீறியதாக தெரிகிறது. இந்த சம்பவம், கன்னட சினிமா உலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், அவர்கள் நீரில் தத்தளித்து மூழ்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 
 

Courtesy - News9
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 32 மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம்..!

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments