Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் மீது ஆசிட் வீசிய ஆட்டோ டிரைவர் - நெல்லையில் கொடூரம்

பெண் மீது ஆசிட் வீசிய ஆட்டோ டிரைவர் - நெல்லையில் கொடூரம்

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (13:15 IST)
திருநெல்வேலி வண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவரின் மனைவி ராமலட்சுமி(25). இவர் ஒரு செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.  


 

 
அவருக்கு, திருமணத்திற்கு முன்பு, சின்னராசு என்ற ஆட்டோ ஓட்டுனரிடம் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அதன்பின் முருகேஷை அவர் திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணமாகி 7 வருடங்கள் ஆகியும் ராமலட்சுமிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், அவருக்கு மீண்டும் சின்னராசுவுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.  
 
சம்பவம் நடந்த அன்று, களக்காடு பகுதிக்கு ராமலட்சுமியை வரவழைத்து அவர் மீது ஆசிட் வீசியுள்ளார் சின்னராசு. இதனால் தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டு, ராமலட்சுமி அலறித் துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
உடலில் 60 சதவீத காயங்களோடு, ராமலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பி ஓடிய சின்னராசுவை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments