நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 80 பேர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் சீனாவின் 19 நகரங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, சீனாவில் மட்டும் 2,744 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதகாவும், அதில் 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பீஹார் பெண்ணுக்கும் மத்திய பிரதேச வாலிபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸின் அறிகுறி இருப்பதால் இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனா மட்டுமின்றி ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் முதல் அமெரிக்கா வரை இந்த வைரஸின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.
இதற்கு சரியான தடுப்பு மருந்து கண்டறிய பல நாட்டு ஆய்வாளர்களும் முயற்சி செய்து வருகின்ற நிலையில், உலக நாடுகளுக்கு தெரியாமல் சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரோனா வைரஸ் இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த நோய் தொற்றைத் தடுக்கும் வகையிலும், பாதிக்கப்படவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் சீனாவில் வேகமாக பெரிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்னும் சீனாவில் 250 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சீனா அதிகாரிகளிடம் பேசு நடத்தப்பட்டதாக தெரிகிறது. அதற்கு அனுமதி கிடைத்தால் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனோ வைரஸ் பரவிய வுகான் நகர் மக்கள் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு செல்கிறார்கள்.
மேலும், வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு எந்த பாதிப்பும் இல்ல என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
கேரளாவில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ராஜஸ்தானை சேர்ந்த வாலிபருக்கும் இந்த நோய் பாதிப்பு இருப்பதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.