Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்டமர் போல வந்து கொள்ளையடித்த மர்ம கும்பல் - சிசிடிவியில் பதிவான வீடியோ

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (18:21 IST)
ஜம்மு காஷ்மீரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்க வந்த கஸ்டமர்கள் போல நடித்து கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள நகைக்கடைக்கு புர்கா அணிந்த பெண்கள் இருவர் நகை வாங்க வந்துள்ளனர். கடைக்காரரிடம் வெவ்வேறு மாடல்களை எடுத்து காட்ட சொல்லி கேட்டுள்ளனர். அவர் எடுத்து காட்டுவதற்காக திரும்பும் நேரம் பார்த்து மயக்கமருந்து தடவிய துணியை அவர் முகத்தில் வைத்து அழுத்த அவர் மயங்கி விழுந்து விட்டார். உடனே ஒரு நபர் வெளியே யாராவது வருகிறார்களா என பார்த்துக் கொண்டிருக்க, மற்றொரு நபர் கடையில் இருக்கும் நகைகளை எல்லாம் அள்ளி பையில் போட்டு கொள்கிறார். வந்த வேலை முடிந்ததும் சகஜமாக இருவரும் சென்று விடுகின்றனர். இதை அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பார்த்த காஷ்மீர் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இங்கு மட்டுமல்ல இதுபோல பல இடங்களிலும் இந்த இருவர் கும்பல் தன் கைவரிசையை காட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் மயக்கமடைந்த நகைக்கடை உரிமையாளர் அந்த புர்கா அணிந்திருந்தவர்கள் பெண்கள்தான் என கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து அந்த கும்பலை காஷ்மீர் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments