Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 எம்.எல்.ஏக்கள் திடீர் தகுதிநீக்கம்: சபாநாயகர் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு

2 எம்.எல்.ஏக்கள் திடீர் தகுதிநீக்கம்: சபாநாயகர் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு
, வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (17:53 IST)
சமீபகாலமாக சபாநாயகர்கள் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து வருவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து, அந்த 18 எம்எல்ஏக்களுக்கு பதிலாக இடைத்தேர்தல் மூலம் புதிய எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இதேபோல் சமீபத்தில் கர்நாடகாவிலும் 17 எம்எல்ஏக்களை அம்மாநில சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகம், கர்நாடகத்தை அடுத்து தற்போது டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இருவரை  சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அணில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகியோர் தகுதி நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது டெல்லியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 67ல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தற்போது 3 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மியின் பலம் 64 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாகரன் இறந்ததற்கு காரணமே வைகோதானா? – கே.எஸ்.அழகிரி பேச்சால் சர்ச்சை