Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

காரில் மூச்சுத்திணறி மரணமடைந்த இரட்டை சிறுமிகள்...

Advertiesment
Twins
, வியாழன், 15 ஜூன் 2017 (16:17 IST)
நாய் குட்டியுடன் விளையாடிய போது, கார் கதவுகள் சாத்தப்பட்டு இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
குர்கான் அருகிலுள்ள ஜமல்பூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கோபிந்த் குமார். இவர் ஒரு ராணுவ வீரர். இவருக்கு 5 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று, உறவினருக்கு சொந்தமான ஒரு காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார் கோபிந்த். காரின் கதவில் பிரச்சனை இருந்ததால், அதை மூடாமல் திறந்த நிலையில் காரை நிறுத்தியிருந்தார்.  இந்நிலையில், அவரின் இரு மகள்களும் வீட்டிற்கு வெளியே நாய்க்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தனர். 
 
அப்போது காரின் கதவு திறந்திருந்ததால், அவர்கள் காருக்குள் சென்று விளையாடியுள்ளனர். அப்போது கதவு சாத்திக்கொண்டது. அதனால் அவர்கள் மூச்சித்திணறி மயங்கிவிட்டனர். 2 அல்லது 3 மணி நேரம் கழித்துதான், கோபிந்த் வெளியே வந்து தனது குழந்தைகளை தேடியுள்ளார். அப்போது அவர்கள் காரில் மயங்கியிருப்பதை கண்ட அவர் பதறியடித்த படி அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 
 
ஆனால், இரட்டை சிறுமிகள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் அதி பயங்கரமான நீச்சல் குளம்; வைரல் வீடியோ