Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (11:07 IST)
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் புனிதம் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை பாதுகாக்கும் நோக்கில், கோயில் வளாகத்திற்குள்ளும் அதை சுற்றியும் சமூக வலைத்தளங்களுக்கான ரீல்ஸ் எடுப்போருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பல காணொளிகளில் கோயிலின் புனிதம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை குறைப்பது போன்று உள்ளது. இது லட்சக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது போன்ற செயல்கள் ஒரு ஆன்மிக தலத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றவை என்றும் தேவஸ்தானம் கண்டித்துள்ளது.
 
அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கோயில் விதிகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கோயிலின் ஆன்மிக சூழலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்களை உருவாக்குவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு அனைத்து பக்தர்களுக்கும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருமலையின் புனிதத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments