இந்தியா மீது 50%ஆக உயர்ந்த வரி.. டிரம்ப் மிரட்டலை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் மோடி..!

Siva
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (09:26 IST)
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரியுடன், கூடுதலாக 25% வரி விதித்து, மொத்த வரியை 50% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் மீது மேலும் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர்  எச்சரித்துள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘ நீங்கள் இன்னும் நிறைய விஷயங்களை பார்க்க போகிறீர்கள். பல துணை தடைகளை பார்க்க போகிறீர்கள்" என்று பதிலளித்தார்.
 
முன்னதாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட நிர்வாக உத்தரவில், இந்திய இறக்குமதிகள் மீது மேலும் 25% வரி விதிக்கப்படுவதாகவும், இதனால் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வரிவிதிப்பு, ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வரி உயர்வை "நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது மற்றும் விவேகமற்றது" என்று கூறி இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும்,  அமெரிக்காவின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருவதால் டிரம்பின் மிரட்டலை மோடி லெப்ட் ஹேண்டில் டீல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments