Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்திஜி-க்கு ரிடயர்மெண்ட்; மோடிஜி-க்கு அப்பாய்ண்ட்மெண்ட்! டிவிட்டரில் கலாட்டா!

Advertiesment
காந்திஜி-க்கு ரிடயர்மெண்ட்; மோடிஜி-க்கு அப்பாய்ண்ட்மெண்ட்! டிவிட்டரில் கலாட்டா!
, புதன், 25 செப்டம்பர் 2019 (14:46 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என கூறியிருப்பது கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது. 
 
இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியிலான சந்திப்பு நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது மோடி குறித்து டிரம்ப் பின்வருமாறு பேசினார்,
 
மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இந்தியாவுடன் வர்த்தக நீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளன, மோடி ஒரு ஜெண்டில்மேன். சிறந்த தலைவர். அவர் ஆட்சிக்கு வரும் முன்னர் இந்தியா மோசமான நிலையில் இருந்தது. 
webdunia
மோடி ஒரு தந்தை போல் இந்தியாவை ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளார். ஒருவேளை மோடி இந்தியாவின் தந்தையாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதேபோல பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர் என தெரிவித்துள்ளார்.  
 
மோடி இந்தியாவின் தந்தை என்றால் தேச பிதா என அழைக்கப்படும் காந்தி யாரு? என இதற்கு சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகளும் எழுப்பட்டு வருகிறது. இதோடு இந்தியா ரூபாய் நோட்டுகளில் காந்தியின் இடத்தில் மோடியின் புகைப்படத்தை போட்டு புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. 
 
அதோடு, தேச தந்தை பொருப்பில் இருந்து ஜாந்திஜி-க்கு ரிடயர்மெண்ட் கொடுத்து விட்டதாககவும், அந்த இடத்திற்கு தற்போது மோடியை அப்பாய்ண்ட் செய்துள்ளதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகமாகிறது முதல் ஆண்ட்ராய்டு 10 ஸ்மார்ட்ஃபோன்..