Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது மூன்று மாநில தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (23:57 IST)
இந்தியாவில் தற்போது மொத்தம் 19 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி புரிந்து வருகின்றன. சமிபத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிந்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் ஏற்கனவே தேர்தல் முடிந்துவிட்ட நிலையில்  நாகாலாந்து, மேகாலயா ஆகிய 2 மாநிலங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்துள்ளதால் முதல்முறையாக வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக தனது முத்திரையை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்று வெளியான கருத்துக்கணிப்புகளில் திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாஜக வீழ்த்தும் என்று கூறப்பட்டுள்ளது. தேபோல், நாகாலாந்து மற்றும் மேகாலயாவிலும் பாஜகா ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவே கணிப்புகள் கூறுகின்றன. கருத்துக்கணிப்புகளின் பாரதிய ஜனதா கட்சி 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் அந்த கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துவிடும். இந்த மூன்று மாநிலங்களிலும் வரும் மார்ச் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments