Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

Uttar Pradesh Collapsed Bridge

Prasanth Karthick

, திங்கள், 25 நவம்பர் 2024 (09:59 IST)

கூகிள் மேப்பை பார்த்து பயணித்த கார் சேதமடைந்திருந்த பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

 

 

உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளை அறிய கூகிள் மேப்பை பயன்படுத்துவது வாடிக்கையாகி உள்ளது. அதேசமயம் பாதைகளில் ஏற்படும் மாற்றங்கள், கட்டுமான பணிகள் குறித்த அப்டேட்கள் கூகிளுக்கு தெரியாததால், அதன் பாதையை நம்பி சென்று விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. அப்படியொரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

 

உத்தர பிரதேசத்தின் படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் அருகே ராம்கங்கா ஆறு உள்ளது. இதன் மேல் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதியாக உடைந்தது. பாதி உடைந்து பயன்பாடு அற்று கிடந்த அந்த பாலம் குறித்த தகவல்கள் ஆன்லைன் மேப்பில் அப்டேட் செய்யப்படவில்லை.
 

 

இந்நிலையில் பரேலியை சேர்ந்த 2 சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் மேப்பின் உதவியோடு பயணம் செய்த நிலையில் அந்த பாலம் முழுமையாக உள்ளதாக நம்பி அதில் ஓட்டிச் சென்றபோது பாலத்தின் மீதிருந்து விழுந்து கார் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

 

பாலம் பயன்பாட்டில் இல்லாதபோதும் பாலத்தின் தொடக்கத்தில் தடுப்பு பலகைகள் ஏதும் அமைத்து பயணிகளை எச்சரிக்காமல் இருந்ததே விபத்திற்கு காரணம் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!