Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (18:42 IST)
அகமதாபாத் அருகே விமான ஏற்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் டெல்லி அருகே ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
 
டெல்லி சிவாஜி பாலம் அருகே ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து காஜியாபாத் நோக்கி சென்ற  ரயிலின் நான்காவது பெட்டி திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ரயில் விபத்தால் அந்த பகுதி வழியாக செல்லும் பல ரயில்கள் தாமதமானதோடு, சில ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டது. தகவல் கிடைத்த உடனே, மீட்பு பணி துவக்கப்பட்டு, தொழில்நுட்ப குழுவினர், கிரேன் உபகரணங்களுடன் சம்பவ இடத்தை வந்தடைந்தனர்.
 
தற்காலிகமாக பாதிக்கப்பட்ட பெட்டியை மீட்டெடுத்ததும், சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பியது. இது தொடர்பான முன்நிலை விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது. 
 
இந்த சம்பவம் டெல்லி புறநகர் ரயில்களில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சேவையில் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments