Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு வந்த சோதனை காலம்

பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு வந்த சோதனை காலம்

பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு வந்த சோதனை காலம்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (12:58 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை பற்றி, மாணவர்கள் புத்தகத்தில் இருந்து நீக்க கோரி பெற்றவர்கள் கல்வித்துறையை முறையிட்டுள்ளார்கள்.


 


ரஷ்யா நாட்டை சேர்ந்த 29 வயதான டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, தனது 18 வயதில், ஒற்றையர் டென்னிஸில் முதல் இடத்தை பிடித்தவர். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றி பெற்ற ஒரே ரஷ்ய வீராங்கனை அவர், தனது வெற்றிகாக கடுமையாக உழைப்பது மட்டுமல்லாமல், பல பிடித்தமான விஷயங்களையும் தியாகம் செய்து அந்த நேரம் முழுவதும் டென்னிஸில் செலவிட்டவர். இதனால் அவரின் வாழ்கையை மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைக்க கோவா மாநில கல்வித்துறை முடிவு செய்தது. இதை தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு IX வகுப்பு மாணவர்களின் ஆங்கில பாடத்தில் ரீச் ஃபார் த டாப் (Reach for the Top) என்ற பெயரில் ஷரபோவாவின் வாழ்கையை பற்றி அச்சிடப்பட்டது.

இந்நிலையில், ஷரபோவா,  கடந்த 2016-ஜனவரி மாதம், ஆஸ்திரேலிய ஓபன் சென்னிஸின் போது தடை செய்யபட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது வெளிச்சத்திற்க்கு வந்தது. இதை தொடர்ந்து, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, அவரை 2 ஆண்டுகள்  டென்னிஸ் விளையாடுவதிலிருந்து தடை விதித்தது. இந்நிலையில், இப்படிபட்ட ஒரு குற்றப்பின்னணியில் இருக்கும் அவரின் வாழ்கையை படித்தால், மாணவர்களுக்கு அது ஒரு மோசமான உதாரணமாகிவிடும், அதனால் அவரின் பாடத்தை, புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும், கல்வித்துறையிடம் முறையிட்டனர். இதை அடுத்து, ஷரபோவாவின் பாடத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி உறவில் சந்தேகம்: கட்டையால் தாக்கி கருவை கலைத்த கணவன்