Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்: டி.ஆர். பாலு, கனிமொழி பங்கேற்பு

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (08:40 IST)
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்:
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடைபெறும் போது தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா காலத்திலாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது
 
ஆனால் நீட் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பிடிவாதமாக இருந்ததால் நேற்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ள திமுக, அடுத்தடுத்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நீட்தேர்வுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது. திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் 
 
நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் இன்னும் சிறிது நேரத்தில் கூட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக டிஆர் பாலு, கனிமொழி உள்பட திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments