Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபரேசன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

Siva
புதன், 7 மே 2025 (17:39 IST)
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கு, சுற்றுலாப் பயணிகளால் பரவலாக விரும்பப்படும் இடமாகும். ஏப்ரல் 22 அன்று இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 
இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' எனும்  தாக்குதலை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான பதிலாக கருதப்படுகிறது.
 
ஏப்ரல் 221 தாக்குதலுக்கு பிறகு வெறிச்சோடியிருந்த பஹல்காம் பகுதியில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர். இந்த பாதுகாப்பான சூழலை வரவேற்கும் வகையில், சுற்றுலாப் பயணிகள் இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
 
பஹல்காமில் “ஜெய் ஹிந்த்”, “பாரத் மாதா கீ ஜெய்” என வலம்வந்து முழக்கமிட்ட அவர்கள், இந்தியாவின் திடமான நடவடிக்கையை பாராட்டினர். மக்கள் மற்றும் பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாடிய கொண்டாட்டம் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு வெளிநாடுகளிலும் ஆதரவு கிடைத்திருப்பதை உணர்த்துகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments