டெல்லியில் வரலாறு காணாத காற்று மாசுபாடு.. நாளை கிரிக்கெட் போட்டி நடக்குமா?

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (14:09 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும்  இரு அணிகளுமே அரையிறுதிக்கு செல்ல முடியாது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் ஆக டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அருண்ஜெட்லீ மைதானத்தில் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை மற்றும் வங்கதேச வீரர்கள் இன்று ஈடுபடவில்லை. 
 
மேலும் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் நிபுணர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே நாளைய போட்டி நடைபெறும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments