Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணி வீரர்களை பாராட்டிய பாக், முன்னாள் வீரர் அக்தர்

Shoaib Akthar
, வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:20 IST)
இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர்.

உலகக் கோப்பை-2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 55 ரன்கள் ஆல் அவுட் ஆகி மிக மோசமான தோல்வியடைந்தது.

இப்போட்டியில்  இந்திய பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடினர். இதேபோல் இந்திய அணி சார்பில்  முகமது ஷமி மிக அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் களையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். எனவே இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில்  இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில்   புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் இந்திய அணியை பாராட்டியுள்ளார்.

''இந்தியா வலுவான அணியாக மாறி வருகிறது. ஆனால், இந்திய அணி வீரர்களுக்கு ஓஒரு வேண்டுகோள். உங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாட தொடங்குங்கள். ஷமி மீண்டும் தனது முழு ஆற்றலை வெளிப்படுத்தினால் எனக்கு தனிப்பட்டை விதத்தில் மகிழ்ச்சி. மேலும் சிராஜ், பும்ரா பந்துவீச்சுகள் சிறப்பாக இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரையிறுதி மிஷன் சக்ஸஸ்… வெற்றி பூரிப்பில் கேப்டன் ரோஹித் ஷர்மா!