இந்த வருடம் தீபாவளிக்கு விடுமுறை இல்லை: கல்வி அமைச்சரின் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (23:55 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் இன்று மாநிலம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. எனவே ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஓடுவதாக தகவல் வந்துள்ள நிலையில் நாளைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மகாராஷ்டிர கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ள அதே நேரத்தில் பின்னாலேயே ஒரு அதிர்ச்சி அறிவிப்பும் வெளிவந்துள்ளது.



 
 
இந்த விடுமுறையை ஈடுகட்ட வரும் தீபாவளி அன்று இருக்கும் விடுமுறை ரத்து என்பதுதான் அந்த அதிர்ச்சியான அறிவிப்பு. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மழை பெய்தாலும் பரவாயில்லை, நாளை பள்ளிக்கு வருகிறோம், தீபாவளி விடுமுறையை ரத்து செய்ய வேண்டாம் என்று மாணவர்கள் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த அறிவிப்பு நியாயமான அறிவிப்பு இல்லை என்று அனைத்து தரப்பினர்களாலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments